கோவில்பட்டி கடலைக்கார தெருவில் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் சங்கல்பம் பூஜை , விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கும்ப பூஜை, வேதபாராயணம், சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, மகாபிஷேகம் நடந்தது.
பின்னர் காளியம்மன் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர். ஏ.பி.கே.பழனிச்செல்வம் , கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்மிகம்
கோவில்பட்டி காளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், முதல்-அமைச்சருடன் சந்திப்பு
அடுத்த
தேசிய மருத்துவர்கள் தின விழா
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026