கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் - அமைச்சர் கீதாஜீவனிடம் - மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மந்திதோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில் 31 - வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கே.சீனிவாசன் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவனிடம் கோரிக்கை மனு அளித்தார்.அந்த மனுவில், கோவில்பட்டி நகராட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சி ஆகும். இவ்நகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டில் மந்தித்தோப்பு பிரதான சாலை அமைந்துள்ளது. இச்சாலையை கோவில்பட்டி நகர மக்களும் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். குறுகிய இச்சாலையை அதிகமான மக்கள் பயன்படுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுவரை நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். இச்சாலையை விரிவாக்கம் செய்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். கடந்த கால ஆட்சியில் விரிவாக்க திட்டத்தை கிடப்பில் போட்டதால் இந்த சாலையை விரிவாக்கப்படுத்தக்கோரி இப்பகுதி மக்களும் அரசியல் கட்சிகளும் பல்வேறு இயக்கங்கள் நடத்தியுள்ளனர். இச்சாலையை விரிவுபடுத்த மக்கள் ஆதரவு உள்ளது.தற்போது நகராட்சி நிர்வாகம் சாலை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பி உள்ளது. எனவே தாங்கள் தலையிட்டு கோவில்பட்டி நகராட்சி உட்பட்ட மந்தித்தோப்பு ரோடு பிரதான சாலையை விரிவாக்கம் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் சாலை விரிவாக்கம் செய்யப்படும் என உறுதி அளித்தார்.இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.அர்ச்சுணன். ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
அரசியல்
மந்திதோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் - அமைச்சர் கீதாஜீவனிடம் - மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
100க்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் போராட்டம்.
அடுத்த
கோவில்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026