கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம்!
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மகன் நிரஞ்சன் (18). விளாத்திகுளத்தில் நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் கோவில்பட்டியில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இன்று இரவில் சமையலறை பகுதி வழியாக மேலே ஏறி வெளியே குதித்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.