விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ். எஸ்.ரவி!
யார் இந்த எஸ்.எஸ்.ரவி ?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் - வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சோலையப்பன் என்பவரின் மகன் எஸ்.எஸ்.ரவி (62) பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த எஸ்.எஸ்.ரவி அந்தக்காலத்திலயே B.Com வரை படித்து கலைஞர் கருணாநிதி மற்றும் திராவிடக் கொள்கையின் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக 1981ம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ T.K பழனிச்சாமி முன்னிலையில் தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ஆயுள் கால உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
இவரது தந்தை சோலையப்பன் கருணாநிதியின் தீவிர விசுவாசியாக இருந்து வந்துள்ளார், எஸ்.எஸ். ரவி அமைச்சர் கீதாஜீவனின் தந்தையான பெரியசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்துள்ளார்.
கடந்த 45 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வரும் எஸ்.எஸ்.ரவி கடந்த 2022- ம் ஆண்டு முதல் புதூர் மேற்கு ஒன்றிய துணைச்செயலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
2022-ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட எஸ்.எஸ்.ரவி பின்பு திமுக கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதால் மாவட்ட கவுன்சிலர் விருப்பமனுவை வாபஸ் பெற்றார்.
கடந்த 2019 ம் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தார், அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருப்பமனு அளித்தார், இந்நிலையில் தற்போது 2026ம் ஆண்டுநடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலுக்கு திமுக சார்பில் தமிழகம் உள்ள தொகுதிகளுக்கு திமுகவினர் விருப்பமனு அளித்து வருகின்றனர், இன்றுடன் திமுக விருப்பமனு அளிப்பது முடிவடைகிறது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக எஸ்.எஸ்.ரவி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு விருப்பமனு அளித்துள்ளார், ஏற்கனவே விளாத்திகுளம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும்,A.C.வசந்தம் ஜெயக்குமார் விருப்பமும் அளித்துள்ள குறிப்பிடத்தக்கது.
அதேபோல் திமுக கூட்டணியான காங்கிரஸ் தொகுதிக்கு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளரான பெருமாள்சாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
2026 சட்டமன்றத்தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவது எஸ்.எஸ்.ரவியா? இல்ல சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனா ? அல்லது A.C.வசந்தம் ஜெயக்குமாரா ? அல்லது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள் சாமியா என பொறுத்திருந்து பார்ப்போம்.
சில மாதங்களுக்கு முன்பு எஸ்.எஸ். ரவிக்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனுக்கும் பனிப்போர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்...