கமுதி அருகே ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் ஸ்கந்த சஷ்டி சூர சம்ஹார 7 நாள் பெருந் திருவிழா காப்புக் கட்டுதலுடன் துவங்கியது!


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி கரிசல்குளம்  கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு  ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் ஸ்கந்த சஷ்டி சூர சம்ஹார 7 நாள் பெருந் திருவிழா காப்புக் கட்டுதலுடன் துவங்கியது,முன்னதாக விக்னேஸ்வர பூஜை புண்மையாகவாசனம் ஸ்ரீ மகா கணபதி ஹோமம் கோ பூஜை திரவியாஹுதி   பூரணாஹூதி தீபாதாரணை நடைபெற்று காப்பு கட்டுதல் நடைபெற்றது. 


அதனை தொடர்ந்து  மூலவர் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகளுக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் இளநீர் விபூதி பஞ்சாமிர்தம்  பன்னீர்  உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் ஸ்கந்த சஷ்டி சூரசம்ஹாரம் வைபவம்,8ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் ஸ்ரீ தெய்வானை அம்பாளுக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது,திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷே அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீராவி கரிசல்குளம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை பக்தர்கள் குழு திருப்பணி கமிட்டியினர் மற்றும்  16 கிராம பக்தர்கள் செய்தனர்.