கமுதி அருகே சிலம்பம் ஆசிரியர் நினைவாக உலகிலேயே பெரிய வடிவிலான மனித உருவ வரைபடத்தின் ஒரே இடத்தில் நின்றவாறு சுழன்று சுற்றிய 500 சிறார் சிறுவர்கள் ஒரு மணி 30 நிமிடம் சிலம்பாட்ட நடனமாடி புதிய உலக சாதனை சான்று!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நாகு பாண்டி சேர்வைக்காரர் சிலம்ப ஆசிரியர் நினைவாக உலகிலேயே பெரிய வடிவிலான மனித உருவ வரைபடத்தில் ஒரே இடத்தில் 500 சிறார் சிறுவர்கள் நின்றவாறு 1 மணி 30 நிமிடம் சிலம்பாட்டம் நடனமாடி நோபல் வேர்ல்டு புதிய உலக சாதனையை படைத்து சான்று பதக்கங்களை பெற்றனர்.
இந்த சிலம்பம் சுற்றும் புதிய உலக சாதனை நிகழ்வில் கமுதி.சாயல்குடி, ,ராமநாதபுரம்,தேவிபட்டினம்,பாம்பன்,மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறார் சிறுவர் சிறுமியர் பங்கேற்று புதிய உலக சாதனை படைத்தனர்.