கமுதி அருகே தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு ட்ரம்செட், ஒயிலாட்டத்துடன் சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராமத்தினர்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது பெருமாள் குடும்பன்பட்டி இங்கு 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 70 ஆண்டுகளாக உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது, இந்த ஆரம்பப்பள்ளியில் 64 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்தப்பள்ளியில் தாங்களும் படித்து, தங்கள் குழந்தைகளும் படிப்பதால் ஆங்கில பள்ளிக்கு இணையாக உள்ளது போல பள்ளி மாணவர்களுக்கு தேவையான டேபிள், சேர்கள் (1 லட்சம் மதிப்பில்) கடிகாரம், கம்ப்யூட்டர், மின்விசிறி, விளையாட்டு உபகரணம் (40 ஆயிரம் மதிப்பில்), மாணவர்களுக்கு தேவையான கடிகாரங்கள், LED Tv, எவர்சில்வர் பாத்திரங்கள், பழங்கள் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை பெருமாள் குடும்பன்பட்டி கிராம மக்கள் ட்ரம்செட் தாரை தப்பட்டையோடு, பொம்மை நடனங்களோடு, ஒயிலாட்டம் நடனம் ஆடி டிராக்டரில் சீர்வரிசையாக ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளிக்கு வழங்கினர்.சீர்வரிசை கொண்டு வந்த கிராம மக்களுக்கு பள்ளியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மற்றும் கிராமமக்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.