ஏய் மாடு வருது ஓடு ஓடு: கமுதி அருகே பரபரப்பாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்!


தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில், கமுதி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.


3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர்,மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்தன.

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக ரொக்கப் பணம் நினைவுப்பரிசு மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நடைபெற்ற மாட்டுவண்டிகள் பந்தயத்தை திமுக மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் வேல்முருகன், ஒன்றிய கழகச் செயலாளர் வி.கே.மனோகரன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியை விழாக்கமட்டியினர் கொடியசைத்து தொடங்கி வைக்க முயன்ற போது ஒரு மாட்டு வண்டி  கூட்டத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது...