கமுதி அருகே வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!



ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ உருவாட்டி காளியம்மன் கோவில் வருஷாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைபந்தயம் நடைபெற்றது.


இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி,திருநெல்வேலி,மதுரை,சிவகங்கை,ராமநாதபுரம்,விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள் சாலையின் இருபுறமும்  நின்று ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஒட்டி வந்த சாரதிகளுக்கு விழாக்கமிட்டி சார்பாக குத்து விளக்கு மற்றும் பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.