விளாத்திகுளம் அருகே ரூ . 34.67-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி துவக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிவஞானபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 34.67-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை உள்ளிட்ட பணிகளுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல்,பொறியாளர் செல்வஜோதி,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.