இலந்தைகுளம் கிராமத்தில் புதிய கலையரங்கத்தினை விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் திறந்து வைத்தார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மந்திகுளம்  பஞ்சாயத்துக்குட்பட்ட   இலந்தைகுளம் கிராமத்தில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய 15 வது நிதி குழுவில் இருந்து இலந்தைகுளம் கிராமத்திற்கு  ரூபாய் 6 லட்சத்து 50ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட புதிய கலையரங்கத்தினை  விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிய சக்தி இராமச்சந்திரன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.


இந்நிகழ்வில், கிளைக்கழக செயலாளர்கள் இராமசாமி, நாடோடி , மந்திக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராமலிங்கம், மந்திக்குளம் கிளை கழகச் செயலாளர் திருத்தொண்டன், திமுக கிழக்கு  ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.