லட்சிய திட்டமான ககன்யான் திட்டத்திற்கு பல்வேறு சோதனைகள் நடைபெற்ற உள்ளது விரைவில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என இஸ்ரோ இயக்குனர் சுதீர் குமார் தூத்துக்குடியில் பேட்டி! தூத்துக்குடியில் சிஐஐ சார்பில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இஸ்ரோ இயக்குனர் சுதீர் குமார் கலந்து கொண்டு விண்வெளி துறையில் தொழில் முனைவோர்களுக்கு எந்த வகையில் எல்லாம் தொழில் துவங்கலாம் என கருத்துக்களை கூறினார். இதில் ஏராளமான இளம் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் இஸ்ரோ இயக்குனர் சுதீர் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே 900 கோடி ரூபாய் செலவில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது குலசேகரபட்டினம் பகுதியில் சிறியரக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டிட பணிகள் விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு துவங்கப்படும் இந்தப் பணிகளின் ஆரம்பிக்கும்போது நிறைய தொழில் முனைவோர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் புதிய புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக வாய்ப்புள்ளது விண்வெளித் துறையில் பல்வேறு தொழில் முனைவோருக்கு வாய்ப்புகள் உள்ளது.இஸ்ரோவின் லட்சிய திட்டமான விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது இதற்காக பல்வேறு சோதனைகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
ரோபோட்கள் மூலம் முதலில் சோதனை செய்யப்பட்டு பின்னர் மனிதனை வைத்து சோதனை செய்யப்படும் லட்சியத் திட்டமான ககன்யான் திட்டம் விரைவில் இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாக ஏவப்படும் என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு
விரைவில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் இஸ்ரோ இயக்குனர் சுதீர் குமார் பேட்டி !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்!
அடுத்த
ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய கலையரங்கம் திறப்பு!