முதல் முதலமைச்சர் ஓமந்தூர்.திரு.இராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விளாத்திகுளம் MLA  மரியாதை!


சென்னை மாகாண முதல் முதலமைச்சர் ஓமந்தூர்.திரு.இராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அண்ணாரின் திருஉருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

.நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.குமரகுருபரராமநாதன்,விளாத்திகுளம் ரெட்டி ஜனசங்க தலைவர் திரு.ராமகிருஷ்ணன்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு.ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.