தேரோட்டத் திருவிழாவில் கலந்து கொண்ட விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை தேரோட்டத் திருவிழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து  தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.