அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெற்ற விளாத்திகுளம் பிரவீன்குமார்!



கடந்த மாதம்  தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் பிரவீன்குமார் தனது ஆதரவாளர்களை  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு MLA தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார்.



அதைத்தொடர்ந்து அதிமுக கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி K. பழனிச்சாமியின் இல்லத்தில் நேற்று 09-03-2026 முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு அவர்கள் மற்றும் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் தலைமையில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர்.