வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ மரியாதை!
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் திருஉருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.