கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம்,இனாம் அருணாச்சலபுரம், கருப்பூர்,மேலநம்பிபுரம், கீழ்நாட்டுக்குறிச்சி, வீரப்பட்டி,தாப்பாத்தி உள்ளிட்ட ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் கோட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் மின்வாரிய துறையில் பெயர் மாற்றம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல் ஆணை மற்றும் மருத்துவத் துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.