விளாத்திகுளத்தில் கோழி திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆர்.எம்.ஜி நகர் பகுதியை சேர்ந்த அய்யனசாமி என்பவர் வீட்டில் நாட்டு கோழி வளர்த்து வருகிறார், இந்நிலையில் இவரது வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் அடிக்கடி திருடு போனது குறித்து, அய்யனசாமி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், விசாரணையில் விளாத்திகுளம் சாலையம் தெரு பகுதியை சேர்ந்த சரவணகுமார் (20)  மற்றும் மீரான்பாளையம் தெருவை சேர்ந்த கார்த்திக் (19) ஆகியோர் இருவரும் அய்யனசாமி வீட்டில் தொடர்ந்து கோழிகளை திருடி வந்தது தெரியவந்தது, இதனை அடுத்து இருவரையும் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.