விளாத்திகுளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77-வது பிறந்தநாளை கொண்டாடிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்!



தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் 77-வது பிறந்தநாள் கொண்டாட்டம் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போக்குவரத்து கழகப் பணிமனை முன்பு அமைந்துள்ள அதிமுக கட்சி கொடிக்கம்பத்தில் விளாத்திகுளம் போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தினருடன் இணைந்து கட்சி நிர்வாகிகள் கழகக்கொடியேற்றி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்விழாவில்,  விளாத்திகுளம் பணிமனை அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் செல்வக்குமார், செயற்குழு உறுப்பினர் மதுரை வீரன், விபத்தும் பிரிவு செயலாளர் ரவி, சண்முகராஜ், வெள்ளச்சாமி, பாலமுருகன், பிச்சை மாரியப்பன், அய்யம்பாண்டி, முருகேசன், ராமசின்னு, சக்திவேல், ஓவ்ராஜ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்