மானாவாரி பயிர்களுக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.8500-ஐ ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் " - எட்டையபுரத்தில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..!
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ;
* ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிப்படைந்த விவசாய நிலங்களுக்கு தமிழக அரசு சார்பில் நேற்றைய தினம் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், மானாவாரிப் பயிர்களுக்கு ஒரு ஹெக்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த ரூ.8500-ஐ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.25000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.(மும்மொழி கொள்கையை எதிர்காமல் அதிமுக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது என்ற துணை முதல்வர் உதயநிதி விமர்சனத்திற்கு...)
* பாஜகவுடன் கூட்டணியாக நாங்கள் (அதிமுக) ஆட்சியில் இருந்தபோது கூட
இந்த மும்மொழி கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.
* உதயநிதி தற்போது துணை முதல்வராக இருந்தாலும் கூட விளையாட்டுப் பிள்ளையாக விவரம் தெரியாமல் பேசி வருகிறார். அவர்களது இயலாமையை எங்கள் பக்கம் திருப்ப பார்க்கிறார்
(அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி விரைவில் இருக்காது.. தன்னிடம் ரகசியம் உள்ளது ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு...)
* அதிமுகவை பற்றி பேசுவதற்கு ஓபிஎஸ்-க்கு உரிமை இல்லை.. இன்றைக்கு கட்சி கொடியை கூட அவரது காரில் பயன்படுத்த முடியாது. அண்ணா திமுகவின் நிலைப்பாட்டை பற்றி அவர் பேசுவது சரியாக இருக்காது
(தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் குற்றங்கள் நிகழ்வதை காவல்துறை கண்டுகொள்ளவில்லையா? என்ற கேள்விக்கு..)
* இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு போதைப்பொருள் நடமாட்டம்தான். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களும் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களும் திமுக காரர்கள்தான்... பின்னர் எப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்கும், குற்றவாளிகளுக்கு திமுகவ காலத்து வாங்கினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி நிலையாக இருக்கும்.
(திருப்பூர் மூவர் கொலை வழக்கில் தற்போது வரை குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடிக்காமல் இருப்பது குறித்து கேட்டதற்கு...)
* இன்றைக்கு தமிழகத்தில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடான சம்பவம் என்றார்..