விளாத்திகுளம் அருகே ரூ.85,44 ரூபாய் லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ரூ 85.44 இலட்சம் மதிப்பிலான வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை ச.கனி ,அரியநாயகிபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜாகிர் உசேன் , சமூக ஆர்வலர் கணேசமூர்த்தி மற்றும் சக ஆசிரியர், ஆசிரியைகள் ,கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.