எட்டையாபுரத்தில் 1044 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் வடக்கு ராதா வீதி அமுதம் ரேஷன் கடை பின்புற பகுதியில், பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவிற்கு கடத்த இருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், எட்டையாபுரம் வட்டாட்சியர் சங்கரநாராயணன் மற்றும் வருவாய் தனி ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் வருவாய் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தபோது, அங்கு சுமார் 18 மூடைகளில் 1044 கிலோ ரேஷன் அரிசி பதிக்க வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, தூத்துக்குடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.