விளாத்திகுளம் அருகே "வம்பன் உளுந்து ரகங்களில் விதை உற்பத்தி வயல் விழா: அதிக அளவில் மகசூல் மற்றும் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையமும், அருப்புக்கோட்டை வம்பன் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து இன்று விளாத்திகுளம் அருகே உள்ள பகிர்ந்தபுளி கிராமத்தில், "வம்பன் உளுந்து ரகங்களில் விதை உற்பத்தி வயல் விழா" அப்பகுதி விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவில் உதவி பேராசிரியர் முனைவர். தியாகு வரவேற்புரை வழங்கினார். இதைத்தொடர்ந்து வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சுப.மாரிமுத்து, பயறு வகை பயிர்களின் முக்கியத்துவம் மற்றும் விதை உற்பத்தியில் கூடுதல் வருமானம் பெறுவது பற்றி விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.மேலும் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ், உளவியல் தொழில் நுட்பங்கள் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் பயறு வகை பயிர்களுக்கான பயிற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.
பின்னர் இந்நிகழ்வில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொ) மனோரஞ்சிதம் பயறு வகை பயிர்கள் சார்ந்த அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் சிறப்புரை வழங்கினார்.
இதை அடுத்து விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் மற்றும் விதை சான்றளிப்பாளர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கி அரசு நிறுவனங்களில் உற்பத்தி செய்த சான்று விதைகளை பயன்படுத்த விவசாயிகளை அறிவுறுத்தினர். வம்பன் தேசிய பயிறு வகை ஆராய்ச்சி மையத்திலிருந்து உளுந்து பயிரில் கடந்த 50 ஆண்டுகளில் 12 கிரகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. தற்போது வம்பன் 8, வம்பன் 9, வம்பன் 10, மற்றும் வம்பன் 11 ஆகிய ரகங்கள் தற்போது விநியோக சங்கிலியில் உள்ளது.
இவற்றுள் உளுந்து வம்பன் 11 ரகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக விதை உற்பத்தி மேற்கொண்டதில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் இல்லாமலும் அதிக காய்கள் எண்ணிக்கை கொண்டதாகவும் மற்றும் மகசூல் அதிகரித்து குயின்டாலுக்கு ரூ.3000 அதிகமாக கிடைத்ததாகவும் விவசாயிகள் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளனர். இதில் பரந்த மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 6 மேற்பட்ட விவசாயிகள், கிள்ளிகுளம் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.