தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக வேளாண்மை அலுவலகம் முன்பு ஏராளமான விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2024 மற்றும் 2025நிதி ஆண்டில் டிசம்பர் மாத கனமழையை தொடர்ந்து மற்றும் பிப்ரவரி மார்ச் மாதமும் பெய்த அதிக கன மழையினால் மிளகாய்,உள்ளி, கொத்தமல்லி உளுந்து பாசி போன்ற பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அதேபோல் சாகுபடி செய்த ஒரு விவசாயி எத்தனை ஏக்கர் பயிர் செய்து பாதிப்படைந்தாலும், அதிகபட்சமாக ஐந்து ஏக்கருக்கு மட்டுமே வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என அரசு தெரிவிக்கின்றது, இந்த உச்சவரம்பை தளர்த்தி பாதிப்படைந்த அனைத்து நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
அனைத்து ஊராட்சி கிராமங்களுக்கும் கண்காணிப்பு கேமரா வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக இன்று 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது புதூர் வேளாண்மை அலுவலகத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து புதூர் வேளாண்மை துறை அதிகாரிகள் விளாத்திகுளம் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.