விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேரூராட்சிக்குட்பட்ட  புல எண் 228/2A என்ற நிலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 79 நபர்களுக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு பட்டா ஆணை வழங்கப்பட்டது. பின்னர் அந்த நிலத்தை ஒழுங்குபடுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு நடவடிக்கைகள் ஏதும் அரசு  இதுவரை எடுக்கவில்லை அந்த நிலத்தை அரசு கணினி  கணக்குகளில் ஏற்றி கம்ப்யூட்டர் பட்டா வழங்கி குடியிருக்க வழிவகை செய்யுமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட குழு உறுப்பினர் அய்யனார் சார்பில் 20 பெண்கள் விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில்,மண்டல துணை வட்டாட்சியர் சுபாவிடம் மனு அளித்தனர்.மண்டல துணை வட்டாட்சியர் சுபா  மனுக்களை பெற்றுக் கொண்டு ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியருக்கு அனுப்பி மனுவின் மீது  நடவடிக்கை எடுக்க  பரிந்துரை  செய்கிறேன் என்று கூறினார். இந்நிகழ்வில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் ஜோதி உடன் இருந்தார்.