விளாத்திகுளம் தொகுதியின் பெண் உசேன் போல்ட்! தேசிய அளவிலான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம். தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர்
எட்டயபுரம் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் சுபாஷினி(20). இவர்
திருநெல்வேலி பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலை சமூக பணி பிரிவில்
முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோவா மாநிலத்தில் இளைஞர்
மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் நடந்த தேசிய தடகள விளையாட்டு
போட்டியில், 1500 மீட்டர்
ஓட்டப்போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் அடுத்த மாத நேபாளம் நாட்டில் உள்ள காட்மாண்டுவில் நடைபெறும் சர்வதேச
போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சுபாஷினி. தேசிய அளவிலான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ள
சுபாஷினியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பாராட்டி ஊக்க தொகை
வழங்கியுள்ளார். மேலும் பலரும் சுபாஷினியை பாராட்டி வருகின்றனர்.
பள்ளியில்
படிக்கும் போது விளையாட்டில் ஆர்வம் இருந்த போதிலும் ஒரு தயக்கம் இருந்தது. கல்லூரியில்
முதலாம் ஆண்டு படிக்கும்போது நடைபெற்ற விளையாட்டு விழாவில் 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு
வெற்றி பெற்றேன். தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றதால் தேசிய அளவிலான
போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அதனை பயன்படுத்தி
முதலிடம் பெற்று பதக்கத்தை வென்றதாகவும், நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் இந்திய சார்பில் பங்கேற்க
தகுதி பெற்றுள்ளதாகவும், தன்னுடைய
பெற்றோர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை இந்த முழு வெற்றிக்கும் காரணம், அது மட்டுமல்ல அது உறவினர்கள் பொதுமக்கள் என
பலரும் தன்னை பாராட்டி ஊக்கப்படுத்தியதாகவும், இனி அடுத்தடுத்து
வரும் போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமின்றி,, ஒலிம்பிக்
போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்
என்பது தன்னுடைய லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.பேட்டி: சுபாஷ்னி
- தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த கல்லூரி மாணவி.
இந்தியா
பெண் உசேன் போல்ட்! தேசிய அளவிலான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு!
அடுத்த
வாக்காளர் சிறப்பு முறைத் திருத்த முகாம் தேதி மாற்றம்.