விளாத்திகுளத்தில் ரூ.1.60 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு திறப்பு !
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும் திருநெல்வேலி விற்பனை குழுவிற்கு உட்பட்ட விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 1.60-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000- மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கினை மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .மார்கண்டேயன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
உடன் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மோகன்தாஸ் சௌமியன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவாசயம்)முருகப்பன், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) விஜயகுமார்,(விற்பனை கூட கண்காணிப்பாளர்) பாலமுருகன், வேளாண்மை அலுவலர் (மேளாண் வணிகம்) உட்பட துறை சார்ந்த அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.