திமுக ஆட்சி மற்றும் நிர்வாகம் இவங்க கண்ட்ரோலில் இல்லை . அவுட் ஆப் கண்ட்ரோலில் தான் இருக்கிறது தறி கெட்டு ஓடுகிறது!



அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் சம்பவம் ஒன்று மட்டுமே நடைபெற்றது. ஆனால் திமுக ஆட்சியில் தற்போது வரை 25 சம்பவங்கள் அதேபோன்று நடைபெற்றுள்ளது:ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு காரணம் அமைச்சர் கீதா ஜீவன் தான் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி!




தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மழையினால் சேதமடைந்த மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தை சீரமைக்காமல் மூன்று மாதங்களுக்கு மேலாக காலம் தாழ்த்திய தமிழக அரசை கண்டித்தும், பாரதியார் பிறந்த இல்லத்தை விரைவில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தியும் பாரதியார் பிறந்த இல்லம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக எட்டையாபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னால் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். தொடர்ந்து சேதமடைந்த பாரதியார் பிறந்த இல்லத்தையும் பார்வையிட்டார் ,இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன்* சின்னப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், 



தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசை மாமேதைகள் பிறந்த மண்ணில் அத்தனை தலைவர்களுக்கும் மணிமண்டபங்கள் அமைத்து அரசு விழா அறிவித்து பெருமை சேர்த்த ஆட்சி அதிமுக ஆட்சி 


திமுகவின் நான்காண்டு கால ஆட்சியில் மணிமண்டபங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதற்கு சாட்சி பாரதி இல்லம் உதாரணமாக உள்ளது 



காமநாயக்கன்பட்டியில் அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டு திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட வீரமாமுனிவர் மணிமண்டபம் தொடங்கப்பட்ட அன்றே மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாளர்கள் இல்லை என்பதால் மணிமண்டபம் மூடிய நிலையில் உள்ளது. தமிழுக்காக தொண்டாற்றிய வரை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளனர் . இதுதான் திமுக ஆட்சியின் லட்சணம் 



அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட தலைவர்கள் சிலைகள், மணிமண்டபங்களை திமுக ஆட்சி ஸ்டிக்கர் ஒட்டித் திறந்துள்ளது 



ஒவ்வொரு துறைவாரியாக திமுக அரசின் அவலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் உச்சகட்டமாக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. 



சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்தது தவறுதான். அதற்கு பரிகாரம் தேட வேண்டும் என்பதற்காக உடனடியாக அவர்களது இல்லத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்து,, அரசு நிவாரணம் அளித்து குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உடனடியாக கொடுத்தோம் .மேங சி பி ஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது மட்டுமின்றி குற்றவாளிகள் எந்த விதத்தில் தப்பி விடக்கூடாது என்று சிறையில் அடைத்து இன்று வரை வெளியே வர முடியாத நிலையில் உருவாக்கி வைத்திருந்தோம் 




அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் சம்பவம் ஒன்று மட்டுமே நடைபெற்றது. ஆனால் திமுக ஆட்சியில் தற்போது வரை 25 சம்பவங்கள் அதேபோன்று நடைபெற்றுள்ளது.



திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது வழக்கு பதிவு செய்யாமலே நடைபெற்றுள்ளது 



காவல்துறைக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது. மேல்மட்டத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக ஒரு உயிர் துடிக்க துடிக்க கொல்லப்பட்டிருக்கிறது . இந்த ஆட்சியின் அவலத்திற்கு இது ஒரு சான்று. இதற்கு விடை 2026 தேர்தல் தான் 



ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான துப்பாக்கி சூடு குறித்து நடந்த எதார்த்தத்தை எடப்பாடி பழனிச்சாமி கூறினார் 




ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு காரணம் அமைச்சர் கீதா ஜீவன் தான். போராட்டத்தினை தொடங்கி விட்டு பாதியிலே நின்று விட்டார் 



ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்கள், ஊழிகள் குடியிருப்புகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன 



 எல்லை மீறிய போது ஏதேச்சையாக நடைபெற்ற சம்பவம் . அரசும்,காவல்துறையும் இந்த நிலையை எதிர்பார்க்காவில்லை



ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடங்கிய 28 வது நாள் ஆலை மூடப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து இப்படிப்பட்ட போராட்ட வேண்டாம் என்று அரசு மக்களுக்கு எடுத்து சொல்லி வந்தது மக்களும் அமைதியாக இருந்தனர் 



அரசியல் காரணத்தினால் நூறாவது நாள் போராட்டம் என்று கூறி அதனை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்த பின்னர் எங்கே போனார்கள். 



இவர்களில் பொறுப்பாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை அப்பாவி மக்கள் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியானர்கள் என்பது மிக துரிதிஷ்டவசமான செயல் என்பதை அரசு உணர்ந்து அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து விசாரணை கமிஷனையும் அமைத்தது 



ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்துவிட்டு இன்றைக்கு அமைச்சர் கீதா ஜீவன் சென்றார் என்றார் அதில் சதி இருக்கிறது. அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் 



காவல்துறையை இன்றைக்கு எப்படி ஆளுங்கட்சி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அதேபோன்றுதான் ஊடக துறையும் வைத்துள்ளது. ஊடகத்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழ்நிலை உள்ளது 




ஒவ்வொரு பிரச்சனை வரும்போதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்வினை ஆற்றி அறிக்கை வெளியிடுகிறார் கண்டனம் தெரிவிக்கிறார் . அதிமுக மாவட்ட செயலாளர் மூலமாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் குரல் கெடுத்து எதிர்க்கட்சியாக அதிமுக இருந்திருக்கிறது 



அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மூடி மறைக்கப் பார்த்தார்கள். நீதிமன்றம் தானாக வந்து வழக்கு பதிவு செய்ய சொல்லிய பிறகு தான் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார் . இந்த வழக்கில் யார் அந்த சார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை . ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதற்கான பதில் கிடைக்கும் 



அதிமுக மத்திய அரசின் அவுட் ஆப் கண்ட்ரோலில்  இருப்பதாக முதல்வர் கூறினார். திமுக ஆட்சி மற்றும் நிர்வாகம் இவங்க கண்ட்ரோலில் இல்லை . அவுட் ஆப் கண்ட்ரோலில் தான் இருக்கிறது தறி கெட்டு ஓடுகிறது. 



எங்க போய் நிற்கும் என்றால் 2026 இல் இதற்கு விடை கிடைக்கும் என்றார்.