விளாத்திகுளத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி பஞ்சமுக தீபாதாரணை!


ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின் வடை ,துளசி ,வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,பஞ்சமுக தீபாதாரணை மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயர் நாமம் பாடி தரிசனம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.