மகாகவி பாரதியாரை இழிவு படுத்திய YOUTUBE சேனல் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்..!



கடந்த 13.12.2025 அன்று மேட்டூர் அணை - 1 சதுரங்காடினும் இடத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவி விலகக் கோரி திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தின் காணொளி "U 2 BRUTUS" என்ற youtube மற்றும் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அதில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மகாகவி பாரதியார் குறித்து மிகவும் இழிவான கருத்துக்களை தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனைக்கண்டித்து மகாகவி பாரதி பிறந்த மண்ணான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் காவல் நிலையத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் எட்டையபுரம் மண்டல் தலைவர் சரவணக்குமார் தலைமையில் பாஜக நிர்வாகிகள், பாரதியார் குறித்து இழிவான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பேசி, பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர். மேலும் இப்புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் எட்டயபுரத்தில் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்...