விளாத்திகுளம் அருகே ரூ.12-லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடை!  

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  முள்ளூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12-லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கட்டிடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.