விளாத்திகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாக மறுசீரமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக மறுசீரமைப்பு 2024 எனும் தலைப்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட மறுசீரமைப்பு பொறுப்பாளர்களான திருச்செந்தூர் தேர்தல் பரப்பரை செயலாளர் அகமது சாஹிப், நெல்லை மண்டல துணைச் செயலாளருமான கரிசல் சுரேஷ், மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் நிர்மலா, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் சடையாண்டி, தொண்டரணி அமைப்பாளர் வில்லாளன் ரெஸ்லி உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிறப்புரையாற்றிய போது புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் பொறுப்பாளர்களுடன் கட்சியினர் இணைந்து பயணிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி சிறப்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட உள்ள பொறுப்பாளர்களிடம் பொறுப்புக்கான விண்ணப்பங்களை மறு சீரமைப்பு பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.