விளாத்திகுளம் அருகே ரூ.444-76-லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழ்நாட்டுக்குறிச்சி - மாசார்பட்டி இடையே ரூ.444-76-லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் பார்வையிட்டு பணியினை துரிதப்படுத்துமாறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.உடன் உதவிசெயற்பொறியாளர் (சாலை மற்றும் பாலம் ) முத்துமாரி, உதவி பொறியாளர் தமிழ் செல்வன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.