விளாத்திகுளத்தில்  ரூ.48- லட்சம் மதிப்பீட்டில்  சுகாதார வளாகம்: MLA மார்கண்டேயன் ஆய்வு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-வது நிதிக்குழு மானிய பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.48- லட்சம் மதிப்பீட்டில்  சுகாதார வளாகம், கலையரங்கம்,இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் அமைத்திடவும் சேதமடைந்துள்ள கட்டிடங்களை சீரமைக்கவும்  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்நிகழ்வில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.தபசுமுத்து, விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.செல்வகுமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.அன்புராஜன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.இம்மானுவேல்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.மகேந்திரன்,உடற்கல்வி ஆசிரியர் திரு.பால்ச்சாமி, பொறியாளர் திரு.மருது,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.