விளாத்திகுளம் அருகே கருப்பட்டி மற்றும் பனைவெல்ல குழுமம் கட்டிடம் கட்டப்படுவதற்கான இடத்தினை MLA ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடியில் வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைவெல்ல குழுமம் கட்டிடம் கட்டப்படுவதற்கான இடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைவெல்ல குழுமத் தலைவர், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.