மார்கண்டயேனை ஆதரித்து  கனிமொழி  எம். பி. இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்!


 தேர்தலில் அளித்த வாக்குறுதி படி மகளிர் உரிமைத்தொகை  வழங்கப்படுகிறது.



அடுத்து ஆட்சி அமையும் போது ரூ. 2000 வழங்கப்படும்.


புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டத்தின் தொகை உயர்த்தப்படும்.



காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.


10 ஆயிரம் பஸ்கள் வாங்கி மக்கள் பயன்பாட்டிற்கு வரும், பஸ்கள் போக முடியாத இடங்களுக்கு மினி பஸ்கள் வழங்கப்படும்..



திமுக ஆட்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றப்பட்டுள்ளது.



நாடாளுமன்ற எம். பி. நிதியில் 4 கோடி ரூபாய் செலவில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


பாரதியார் இல்லம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது,

எட்டயபுரத்தில் தொழில் பூங்கா, ஊராட்சி ஒன்றிய அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



பிஜேபி அதிமுக தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றனர்.



நாடாளுமன்றத்தில் மகளுக்கான இட ஒதுக்கடத்தை கொண்டு வந்த போது திமுக கூட்டணியினர்  அதை தோற்கடித்து விட்டதாக  பாஜக அதிமுக கூட்டணியினர் வருகின்றனர்.



தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கின்ற இடங்களில்33 சதவீத இடங்களை பெண்களுக்காக கொண்டு வந்தார்.



ஆனால் பாஜக இருப்பதில் கொடுக்க மாட்டேன். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தி கொடுப்பேன் என்கிறார்கள்.



850 உறுப்பினர்களாக மாற்றும்போது  தமிழகத்திற்கான சதவீதம் குறைந்து விடும்.


 வட மாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.


 எந்த மசோதாவையும் நாடாளுமன்றத்தில் கொண்டு நிறைவேற்ற முடியும்.



 தமிழக மற்றும் தென்னிந்தியாக்கு எதிராக சட்டத்தையும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டத்தையும் கொண்டுவர முடியும்.



 நினைத்ததெல்லாம் செய்யக்கூடிய இடத்திற்கு அவர்கள் போய் விடுவார்கள்.


தமிழகத்திற்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 



இங்க இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி பாஜக செல்லக்கூடிய எல்லாவற்றிற்கும் தலையாட்டுவார் தவிர எதிர்த்து பேச மாட்டார் கைகட்டி கொண்டு நிற்பார். 


அது அவருக்கு பழகிடுச்சு அவரை சொல்லி குற்றமில்லை.



தொகுதி மறுவரை மசோதாவை எடப்பாடி பழனிச்சாமி எதிர்த்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் தமிழராக பிறந்து விட்டார். 



எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய உரிமையை தமிழக மக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு தந்துள்ளனர். அந்த நன்றி கூட இல்லாமல் மசோதா தோற்கடிக்கப்பட்ட பின்னர்  தமிழகத்தின் உரிமை பறிக்கக் கூடிய மசோதா தோற்றுபோனதற்கு  அவர் வருத்தப்படுகிறார்.



 தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்ககூடியவர்களுக்கு, தமிழகத்தின் உரிமையை பறிக்க கூடியவர்களுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.



தமிழ் மண்ணை தமிழ் மொழியை காப்பாற்ற  நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்ற தொடர்ந்து போராடுகிற நம்முடைய முதல்வரா மு. க. ஸ்டாலின் கரத்தை உயர்த்த வேண்டும் என்று கூறி பேச்சை முடித்தார்.




அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  மார்கண்டயேன், விளாத்திகுளத்தில் விளாத்திகுளம் பகுதி மக்களை சந்தித்து  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.