ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்து இறுதி கட்டப் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சத்யா !
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 443 கிராம பொது மக்களிடமும் மற்றும் புதூர், எட்டையாபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களிடமும் அதிமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைக்கும், திமுக ஆட்சியில் நடைபெற்ற அவலங்களை பற்றி கூறியும்,கடந்த 30 நாட்களாக இரட்டை இலை சின்னத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருடன் இணைந்து தீவிர பிரச்சார சுற்றுப்பயணம் கொண்டு வந்தார்.
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மற்றும் அதிமுகவினர்கள் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் "ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்து " தாரை தப்பட்டையுடன் எட்டையாபுரம் சாலை ஆற்றுப்பாலத்தில் இருந்து திறந்த வெளி வாகனத்தில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை எட்டையாபுரம் சாலையிலிருந்து ஆரம்பித்து விளாத்திகுளம் தியேட்டர் பேருந்து நிலையம் வரை இந்த ஒரு முறை எனக்காகவும், நமது தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கைகூப்பி வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிகட்சியினர் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.