மக்கள் பணியாற்ற வாய்ப்பு தாருங்கள்,விளாத்திகுளம் நகர் பகுதியில் தொழிற்சாலை அமைத்து  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்வேன் : இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர் சத்யா பேச்சு! 


தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சத்யா போட்டியிடுகிறார் நேற்று அதிகாலையில் விளாத்திகுளம் சாலையம் தெரு, பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட், மதுரை ரோடு, அம்பாள் நகர், சன்னதி தெரு, மெயின் பஜார், தாலுகா ஆபீஸ் ரோடு, பத்திர காளியம்மன் கோவில் தெரு, போலீஸ் லயன், காமராஜர் நகர், ஆகிய பகுதிகளில் நடந்தே சென்று வியாபாரிகள் பொதுமக்கள் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் ஆளுயுர மாலை அணிவித்து,சால்வை அணிவித்து வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர் அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது...... புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் ஆசியுடனும், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடனும், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடியார் ஆதரவுடன் உங்களில் ஒருத்தியாகவும், உங்கள் வீட்டு பெண்ணாகவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.அ.தி.மு.க ஆட்சி அமைந்த உடன் விளாத்திகுளம் தொகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் பொறியியல் கல்லூரி அமைக்க பாடுபடுவேன்.வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்ட மூலம் வீடுகள் அனைவருக்கும் கட்டிக் கொடுக்கப்படும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் இலவச பேருந்து பயணத்திட்டம்,சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்,

தமிழகத்தில் போதை பழக்கத்தால் தினமும் பெண்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது சட்டம் ஒழுங்கு பிரச்சனை சரி செய்ய இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித்தொகையாக 10 ஆயிரம் வழங்கப்படும் குலவிளக்கு திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு 2000 வழங்கப்படும்,


ஆண்களுக்கும் பெண்களுக்கும் இலவச பஸ் வசதியும் செய்து தரப்படும், பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் மற்றும் தரமான பொங்கல் பொருட்கள் வழங்கப்படும். 

அ.தி.மு.க ஆட்சி வந்த உடன் பெண் குழந்தை வைப்பு நிதி மீண்டும் வரவு வைக்கப்படும், பெண்களுக்கு மானிய அளவில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்,பயிர் கடன் முறையாக ஆய்வு செய்து விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வாங்க 25,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பிரிட்ஜ் வழங்கப்படும். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனக்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் .

கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு பல்வேறு கொலை கொள்ளைகள் நடந்துள்ளது. 

இந்த அவல நிலையை போக்க எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கு ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதி வைக்கப்படும்.  

விளாத்திகுளம் வளர்ச்சிக்கான 13 அம்ச செயல்திட்டம் விளாத்திகுளத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு

முற்றுப்புள்ளி வைக்கவும், நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும்,2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த செயல்திட்டம் அறிவிக்கப்படுகிறது.

15 வார்டு மக்களுக்கும் R.O. குடிநீர் வசதி, 15 வார்டுகளுக்கும் தரமான சாலை வசதி,நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை மேம்பாடு,பொது மயானம் மின் மயமாக்கல்,கண்மாய் உபரி நீருக்கு தடுப்புச் சுவர்,வைப்பாற்றில் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம்

 15 வார்டு மக்களுக்கும் வடிகால் வசதி,படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு,அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை,பேருந்து நிலையம் நவீன மயமாக்கல்,வேம்பார் ரோடு & துளசிபட்டி பகுதியில் பயணிகள் நிழற்குடை,விவசாய நிலங்களுக்கு பாசன வசதி,பட்டா கிடைக்காத பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கப்படும். 


தமிழகத்தில் நல்ல ஆட்சி மக்களுக்கு வழங்க மீண்டும் நமது விளாத்திகுளம் தொகுதியின் வளர்ச்சிக்கும் அமைதியான சூழல் நிலவுவதற்கும் எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து இந்த  தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்..