இளம்புவனத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்தநாள் விழா மற்றும் 63வது குருபூஜையை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் பசும்பொன் உட்பட தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் என பலதரப்பட்ட மக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே இளம்புவனம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவச் சிலைக்கு எட்டையபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில், முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன் முன்னிலையில், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கிராம மக்களிடம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்புகள் பற்றியும், தியாகங்கள் பற்றியும் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி உட்பட கிளைச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினர்.