"த்தூ.... திமுக மாறி மானங்கெட்டவங்க எவனும் கிடையாது" - மேடையிலேயே காரி துப்பி, திமுக MLA-வை ஒருமையில் வசைபாடிய கடம்பூர் ராஜூ : சட்டமன்ற சம்பவத்திற்கு பதிலடி...!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54வது துவக்க விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனிய சக்தி இராமச்சந்திரன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் பால்ராஜ், ஆகியோர் ஏற்பாட்டில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ், விளாத்திகுளம் அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து,எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார்,கோவில்பட்டி மகளிர் இளம்பெண்கள் பாசறை கவியரசன்,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் போடுசாமி,புதூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன்,புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவர் மோகன், புதூர் அதிமுக நகரச் செயலாளர் ஆண்டி, ,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் பிரியா, மகளிர் அணி நிர்வாகி சாந்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ஆனந்த் ,உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில்,
(கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது கோவில்பட்டியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு(தாய்சேய் நல விடுதி) கட்டிடம் திமுக அரசால் கட்டப்பட்டது என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தவறான தகவலை கூறியதாக தெரிவித்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக...)
பொதுக்கூட்ட மேடையிலேயே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ காரி துப்பி... திமுக மாறி மானங்கெட்டவங்க எவனும் கிடையாது... கோவில்பட்டி தாய் சேய் நல விடுதிக்கு ரூ.12 கோடி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில்.. அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பரிந்துரை பெற்று 19.12.2020ல் என்னால் கொண்டுவரப்பட்டது. முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பொய்யான செய்தியை கூறியுள்ளார் என கடுமையாக ஒருமையில் விமர்சித்தார்.
மேலும், பெண்களிலேயே தகுதி உள்ள பெண்கள், தகுதி இல்லாத பெண்கள் என பிரித்த ஆட்சி இந்த ஆட்சி... இப்போது தேர்தல் வருகிறது என்றவுடன் கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். அவர்கள் மகளிர் உரிமைத்தொகைரூ.1500 தருவதாக கூறுகிறார்கள், நாங்கள் சொல்கிறோம் எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் ரூ.2000 தருகிறோம்.
2021 தேர்தலில் அதர்மம் வென்று தர்மம் தோற்றது.. 2026 தேர்தலில் தர்மம் வென்று அதர்மம் வீட்டிற்குச் செல்கின்ற தேர்தல் தான் 2026.. விளாத்திகுளம் தொகுதியில் அண்ணா திமுகவை ஜெயிப்பதற்கு எவனாலும் முடியாது ,அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவால் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும், அதேபோல், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு செயல்படுத்தப்படவில்லை என விமர்சித்து பேசினார்.
வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் செய்வதில் என்ன தவறு.. ஸ்டாலின் தொகுதியில் 30 ஆயிரம் போலி வாக்காளர்களை சேர்த்து வைத்து தேர்தலை சந்திக்க திட்டமிருந்த திமுகவின் சாயம் இன்றைக்கு வெளுத்துப்போனதால் தேர்தல் கமிஷன் விழித்துக்கொண்டது.
SIR மூலம் வரைவு வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம் செய்யப்படும்.. இங்குள்ள ஆட்சியும் சீர்திருத்தம் செய்யப்படும் என்றார்.