விளாத்திகுளத்தில் பாஜக முன்னாள் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி என்பவரின் மகன் கண்ணன் (35), இவர் முன்னாள் விளாத்திகுளம் ஒன்றிய வடக்கு மண்டல பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார், கண்ணனுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தை ஓராண்டுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தது, இதனால் மனைவி கடந்த 6 மாதங்களாக ஒரு குழந்தையுடன் கண்ணனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கு கடன் பிரச்சினை அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது, இதனால் மன விரக்தியில் இருந்து வந்த கண்ணன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கண்ணன் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்ணனின் உடன் பிறந்த சகோதரி இரண்டு நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.