விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம். 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், எட்டையாபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட 5 தாலுகாக்கு உட்பட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம்  கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது, இதில் விவசாயிகள் 2024-ம் ஆண்டுக்கான வெங்காயபயிர் காப்பீட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், காட்டுப்பன்றி களிடமிருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக காட்டுப்பன்றிகளை அழித்திட அதன் வாழ்விடங்களான கண்மாய்கள் ஏரிகள் குளங்கள் ஆகியவற்றில் உள்ள சீமை கருவேல மரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களையும் அழித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.