முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவில்பட்டியில் திமுக சாதனை விளக்க பிரச்சாரக்கூட்டம்..!



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் புதூர் மேற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றியச் செயலாளர் மும்மூர்த்தி தலைமையில், "திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்" நடைபெற்றது. இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடையே 4 ஆண்டுகள் ஆட்சிகாலத்தில் திமுக அரசின் சாதனைகளையும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பபடவுள்ள திட்டங்கள் பற்றியும் சிறப்புரையாற்றினார். அப்போது, கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் பயிர்க்காப்பீடு வழங்க நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். மேலும், சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலான கிராமங்களில் பேருந்து நிறுத்தம், சாலைகள், கலையரங்கம், பள்ளி வகுப்பறைக் கட்டிங்கள் போன்ற ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறி திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். இந்த மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் பேரூர் கழக செயலாளர்  மருதுபாண்டியன், தலைமை கழகப் பேச்சாளர்கள் தக்கோலம் தேவபாலன், தமிழ் பிரியன், ஆனந்த் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஒன்றிய அவைத் தலைவர் முத்தையா, ஒன்றிய பொருளாளர் கோசல்ராம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் தங்கராஜ், செல்லப்பாண்டி, முத்துராமலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகள் வேலுச்சாமி, அழகு பாண்டி, கிருஷ்ணசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், தர்மலிங்கம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், ஒன்றிய ஆதிதிராவிடர் நல குழு ராஜாராம், ஒன்றிய பிரதிநிதி தட்சிணாமூர்த்தி, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் கருப்பையா, ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் முத்துலட்சுமி, மாதலபுரம் பாக முகவர் ஆசைத்தம்பி, ஒன்றிய இளைஞரணி மனோஜ் ,

பொறியாளர் அணி சூரியகுமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி காளிதாஸ், மஞ்சுளா, ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் மோகன்ராஜ், விவசாய அணி அமைப்பாளர் முத்துராஜ், தொண்டரணி அமைப்பாளர் நாகராஜ், நெசவாளர் அணி அமைப்பாளர் திருமூர்த்தி, சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் தமிழ்செல்வன், இலக்கிய அணி அமைப்பாளர் சதீஷ்குமார், மீனவர் அணி அமைப்பாளர் சக்திவேல், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாக்கியராஜ், அமைப்புசாரா ஓட்டுநர் அணி முருகன்

உட்பட கிளை செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.