படர்ந்தபுளியில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் "நாடு போற்றும் நான்காண்டு; தொடரட்டும் இது பல்லாண்டு" -என்ற தலைப்பில் திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட படர்ந்தபுளி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன் தலைமையில் மாபெரும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த நான்காண்டுகளில் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றியும், இனிவரும் காலங்களில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் பற்றியும் விளக்கி பேசினார். மேலும், விளாத்திகுளம் தொகுதியில் செயல்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதில் தலைமை கழக பேச்சாளர் நெல்லை கவிஞர் சு.த.மூர்த்தி, மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஒன்றிய அவைத்தலைவர் அருள்ராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் காளிராஜ் பாண்டியன், தமிழ்வாணன், ஒன்றிய பொருளாளர் ராகவன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன், ராஜ், ஆதிசங்கர் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் டேவிட்ராஜ், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், வழக்கறிஞர் அணி மகேஷ், தொமுச செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சங்கர்ராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சுப்புராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா, ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி மகளிர் பிரிவு நந்தினி, ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் போதம்மாள், படர்ந்தபுளி கிளைச் செயலாளர்கள் கற்பகராஜ், அப்பணசாமி, படர்ந்தபுளி கிளைக் கழக நிர்வாகிகள் ஆத்தியப்பன், பெருமாள்சாமி, சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, முருகவள்ளி, குருசாமி, நாகராஜ், மாடசாமி விளாத்திகுளம் பேரூர் கழக வார்டு செயலாளர்கள் அய்யனார், மாரிராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட கழக நிர்வாகிகள், கிளைச்செயலாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.