விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கரண்ட் கட் : 540 மாணவர்களுக்கு சஸ்பெண்ட் கொடுத்த கல்லூரி முதல்வர் : சரி செய்யும் பணியில் தாமதம்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகாபுரத்தில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில்,  இளநிலை பாடப் பிரிவுகளாக B.A. தமிழ், B.A. ஆங்கிலம், B.A. பொருளாதாரம், B.Com, B.Sc கணிதம், B.Sc கணினி அறிவியல் மற்றும் BBA என 7 பாடப்பிரிவுகளும், முதுநிலை பிரிவில், M.A. ஆங்கிலம், M.Com, M.Sc கணிதம் என 3 பாடப்பிரிவுகளும் உள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் என சுமார் 540 பேர் பயின்று வருகின்றனர். தற்போது இக்கல்லூரியின் வாயிலில் சிறிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்க்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு JCB இயந்திரம் மூலம் குழி தோண்டியபோது, கல்லூரிக்கான மின் இணைப்பு உயர் மின்னழுத்த மின் ஒயர்கள் சேதமடைந்தாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி அப்போது மழை பெய்த காரணத்தினால் உயர் மின்னழுத்த திறன் கொண்ட மின் ஒயர்கள் மீது மழை நீரில் நனைந்ததால், கல்லூரியின் மின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மின் பொருட்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று (19.09.2023) முழுவதும் மின்சாரம் மன்றி கல்லூரியின் அலுவலகப் பணிகள் முடங்கியது மட்டுமின்றி, மாணவர்களும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி  வெட்கையில் அவதிப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கல்லூரி முதல்வர் இராமலிங்கம், கல்லூரிக்கான மின் இணைப்பு பணிகளை சரி செய்யும் வரை கல்லூரி மாணவர்களுக்கு சஸ்பெண்ட் கொடுத்து விடுப்பு எடுக்க செய்துள்ளார். இதனால் கல்லூரியில் மாணவர்களின்றி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இப்பிரச்சினையை சரி செய்ய நாகலாபுரம் மின்வாரியத்தினரிடம் கல்லூரி நிர்வாகம் கேட்டுள்ளனர், ஆனால் இதனை வந்து பார்த்துவிட்டு இதனை பொதுப்பணித்துறை மின் பொறியாளர்களால் சரி செய்ய முடியும் என தெரிவித்து சென்றதாக கூறப்படுகிறது. ஏனென்றால் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு ஒயர்கள் செல்லும் பாதைகள் அவர்களுக்குதான் தெரியும் என்றும் தங்களது கட்டுப்பாட்டில் வராது என்றும் கூறியுள்ளனர். பின்னர் இன்று கல்லூரியில் பயிலும் 540 மாணவர்களுக்கும் சஸ்பெண்ட் கொடுத்து விடுப்பு எடுக்க செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். "கரண்ட் இல்லாததால் கல்லூரிக்கு விடுமுறை அளித்த நிகழ்வு விளாத்திகுளம் பகுதியில் பேசும் பொருளாகியுள்ளது. * மின்சாரம் இல்லாததால் கல்லூரி மாணவர்களுக்கு சஸ்பெண்ட் கொடுத்து விடுப்பு எடுக்க செய்த கல்லூரியின் முதல்வர் இராமலிங்கத்திடம் கேட்டபோது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக கல்லூரியின் மின் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் உயிரிழத்த மின் திறன் கொண்ட மின் ஒயர்கள் பழுதடைந்துள்ளதாகவும், இதனை சரி செய்ய முதலில் நாகலாபுரத்தில் உள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் சரி செய்து தரும்படி கேட்டுள்ளார்.. அதற்கு நேரில் வந்து பார்த்துவிட்டு மின்வாரிய அதிகாரிகள் இதனை தங்களால் சரி செய்ய முடியாது என்றும், பொதுப்பணித்துறை மின் பொறியாளர்கள் வந்து தான் பார்த்து சரி செய்ய முடியும் என தெரிவித்தனர். இதையடுத்து நேற்றைய தினமே திருநெல்வேலி மண்டல பொதுப்பணித்துறை மின் பொறியாளர்களிடம் கல்லூரியின் மின்சாரப் பழுது நிலை குறித்து எடுத்துரைத்ததாகவும், அவர்கள் இன்று வந்து பார்க்கிறோம் என கூறியதாக கல்லூரி முதல்வர் கூறினார்... அதே வேளையில், மின்சாரம் இல்லாததால் மின்மோட்டார்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையால் மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை தண்ணீர் வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால் இன்று கல்லூரி மாணவர்களுக்கு சஸ்பெண்ட் கொடுத்துள்ளதாகவும், இன்றைய தினம் இந்த மின்சார பிரச்சனை சரி செய்யாவிட்டால் நாளையும் மாணவர்களுக்கு கல்லூரி வகுப்புகள் நடத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் மின் இணைப்பு பழுது காரணமாக கல்லூரியில் கரண்ட் இல்லாததால் மாணவர்களுக்கு சஸ்பெண்ட் கொடுத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, கல்லூரி நிர்வாகம் உடனடியாக அவற்றை சரி செய்து மாணவர்களுக்கு வழக்கம் போல் கல்லூரி வகுப்புகளை நடத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது....