தூத்துக்குடி புரட்டாசி மாதம் பிறப்பு மற்றும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்காக ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கியுள்ளதால் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில்  மீன்களின் விலை குறைய துவங்கியது.பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளதன் காரணமாகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்ட முத்தாரம்மன் தசரா திருவிழாவிற்காக 40 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கியுள்ளனர் இதன் காரணமாக ஆசைவ உணவுகளை ஏராளமானோர் இந்த மாதங்களில் தவிர்ப்பர்.

தமிழகம் முழுவதும் புரட்டாசி மாதம் பிறந்ததால் பெருமாள் கோவில் வழிபடுவோர் மற்றும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு ஏராளமான அவர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம், இதன் ஒரு பகுதியாக ,தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் காற்று காரணமாக குறைவான அளவு மீன்களே வருகின்றன குறைவான மீன்கள் வந்த நிலையிலும் அசைவ உணவுகளை ஏராளமானோர் தவிர்ப்பதால் மீன்களின் விலை குறைவாக காணப்பட்டது.வழக்கமாக கிலோ 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் சீலா மீன்கள் கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரையும் கிலோ 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட விளை மீன்கள் கிலோ 350 வரையும் கிலோ 300 முதல் 400 முதல் விற்பனை செய்யப்பட்ட பாறை மீன்கள் கிலோ 200 வரையும் கிலோ 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஊழி மீன் கிலோ 300 வரையும் நெத்திலி ஒரு கூடை மூவாயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 2000 முதல் 2300 ரூபாய் வரை விலை குறைந்து விற்பனையாகிறது.மீன்களின் விலை குறைவால்  தருவைகுளம், வேம்பார், பெரியசாமிபுரம்,கீழ வைப்பார்,சிப்பிகுளம், பட்டினமருதூர், உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மற்றும் மீன் தொழில் செய்பவர்கள் , மீன் வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.