தமிழகத்தில், வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதி மக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்குவோம் என்று பொதுமக்களிடம் நம்பிக்கையூட்டும் வகையில், விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிராமத்தில் டி.எஸ்.பி இராமகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை இராணுவப் படையினர் என 80க்கும் மேற்பட்டோர் இசைக்கருவிகள் முழங்கயவாறு அணிவகுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், நம்பிக்கையூட்டும் விதமாகவும் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்...
Vilathikulam
மத்திய துணை ராணுவபடை மற்றும் போலீசார் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரபாண்டிய கட்டபெம்மனை வணங்கி... வீர வசனம் பேசி வாக்கு சேகரித்த கடம்பூர் ராஜூ!
அடுத்த
குளத்தூர் அரசுப்பள்ளி மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடி மையத்தை ஆட்சியர் லட்சுமிபதி நேரில் ஆய்வு செய்தார்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026