எம்.குமாரசக்கணபுரம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கண்மாய்க்கு மதகு அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன்.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம். குமாரசக்கணபுரம் கிராமத்தில் உள்ள கண்மாயின் மதகுகள் கடந்தாண்டு பெய்த தொடர் மழை காரணமாக மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் இந்த கண்மாயின் சேதமடைந்த மதகுகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய மதகுகள் அமைத்து தர வேண்டும் என்று விளாத்திகுளம் அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று எம் குமாரசக்கணபுரம் கிராமத்தில் கண்மாய்க்கு மதகுகளை அமைக்க ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து ஒப்பந்திடப்பட்டு இன்று அக்கிராமத்தில் பூமி பூஜை செய்து மதகுகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும் ஒப்பந்ததாரரிடம் மழைக்காலம் வருவதற்கு முன்பாக உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் சித்திர சேகர், ஒப்பந்ததாரர் சுஜித், கிராம ஊராட்சி மன்ற தலைவர் இராமகிருஷ்ணன் உட்பட ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.