விளாத்திகுளத்தில் அதிமுகவினர் சார்பில் அண்ணல் அம்பேத்கருக்கு மரியாதை ! 



சட்டமாமேதை டாக்டர். அம்பேத்கரின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கட்சியினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினர் அம்பேத்கரின் திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இதில் விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், நகர செயலாளர் மாரிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சடையாண்டி, பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.