விளாத்திகுளம் அருகே முன்னாள் முதல்வர் டாக்டர் MGR ரின் 109-வது பிறந்தநாள் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!



தமிழக முன்னாள் முதல்வர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் MGR ரின் 109வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் எம்ஜிஆரின்  திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவகாமசுந்தரி ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன்கொண்டாடினர்.


இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, குளத்தூர் நகர செயலாளர் வேல்மயில், குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.